வலோகிதம் | யாப்பு மென்பொருள்

பன்னூறாயிரம் விதத்திற் பொலியும் புகழ் அவலோகிதன் மெய்த் தமிழே !

மோனை

ஒரு சீரின் முதலெழுத்து பின்வரும் சீர்களுடைய முதலெழுத்துக்களுடன் ஒன்றி வருது மோனை ஆகும்.

மோனை எழுத்துக்கள்

நேரடியாகவே ஒன்றி வரும் எழுத்துக்களைத் தவிர்த்து (கரம்-ன்னை, குடை-குழை முதலியன போல), கீழ்க்கானும் எழுத்துக்களும் ஒன்றுக்கொன்று மோனை ஆகும்.

 

அ - ஆ - ஐ - ஔ

இ - ஈ - எ - ஏ

உ - ஊ - ஒ -ஓ

ஞ - ந

ம - வ

த - ச

 

வலை - மனை - மோனை

ஞாயிறு - நான் - மோனை

கலை - காளை - மோனை

 

பா உதாரணம்

அணிமலர் அசோகின் தளிர்நலம் கவற்றி

அரிக்குரல் கிண்கிணி அரற்றும் சீறடி

அம்பொன் கொடிஞ்சி நெடுந்தேர் அகற்றி

அகன்ற அல்குல் அந்நுண் மருங்குல்

அரும்பிய கொங்கை அவ்வளை அமைத்தோள்

அவிர்மதி அனைய திருநுதல் அரிவை

அயில்வேல் அனுக்கி அம்பலைத்து அமர்ந்த

கருங்கயல் நெடுங்கண் நோக்கம்என்

திருந்திய சிந்தையைத் திறைகொண் டனவே

எதுகை

ஒரு சீரின் இரண்டாமெழுத்து பின்வரும் சீர்களுடைய இரண்டாமெழுத்துக்களுடன் ஒன்றி வருது எதுகை ஆகும். இரண்டாம் எழுத்து பொருந்தும் அதே நேரத்தில், இரு சொற்களுடைய முதலெழுத்துக்களின் மாத்திரை அளவுகளும் பொருந்தி வர வேண்டியது அவசியம்.

 

படம் குடம் - எதுகை

பாடம் கூடம் - எதுகை

 

படம் கூடம் - எதுகை அல்ல

பாடம் குடம் - எதுகை அல்லமிக்கவன் போதியின் மேதக்கு இருந்தவன் மெய்த்தவத்தால்
தொக்கவன் யார்க்கும் தொடர ஒண்ணாதவன் தூயன் எனத்
தக்கவன் பாதம் தலைமேல் புனைந்து தமிழுரைக்க !

Copyright © 2013 Vinodh Rajan. This software is released under GNU AGPL v3 license. You may read the license here