வலோகிதம் | யாப்பு மென்பொருள்

பன்னூறாயிரம் விதத்திற் பொலியும் புகழ் அவலோகிதன் மெய்த் தமிழே !

உதவி

ஒரு செய்யுளை உள்ளிட்டால், அவலோகிதம் அதன் சம்பந்தமான கீழ்க்கண்ட யாப்பு உறுப்புகளை வெளியிடும்:
இந்த மென்பொருள், வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா முதலிய நால்வகைப்பாக்களையும் அதற்குரிய பாவினங்களையும் கண்டுகொள்ளும் திறன் கொண்டது  

செய்யுள் இட வேண்டிய வழிமுறைகள்

கூடுதல் தேர்வுகள்

உயிர்முன் குற்றியலுகரத்தை அலகிடாது விடுதல்

பல சயமங்களில், உயிரெழுத்துக்களுக்கு முன் வரும் குற்றியலுகரத்தை ஒற்றெழுத்தாக கருதி அலகிடாது விடுதல் வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே வெண்பாவில் தளை தட்டாது. இதை செயல்படுத்த இத்தேர்வை தேர்ந்தெடுக்கவும்.

வெண்பா விதிகளோடு ஒப்பிடுதல்

தங்களுடைய பாவினை வெண்பா விதிகளோடு ஒப்பிட்டு அதன் முடிவுகளை வெளியிடும்.

அடிக்கடி கேட்கப்படக்கூடிய :) கேள்விகள்

 1. செய்யுளின் பாவகை தவறுதலாக காட்டப்படுகிறது. உதாரணமாக, நான் இட்ட வெண்பா வெண்டுறையாக வருகிறது. ஏன் ?

 2. வெண்பாவின் யாப்பு விதிகள்(வெண்டளை, சீர் வாய்ப்பாடு, ஈற்றசை வாய்ப்பாடு) முதலியவை அனைத்தும் பொருந்தி வருகிறதா எனப்பார்க்கவும். வெண்பாவிற்குரிய யாப்பு விதிகள் மீறப்படும் நிலையில், அதற்கு நெருங்கிய வெண்பாவின் இனமாகிய வெண்டுறை பொருத்தி அதுவே காட்டப்படும். 
   
  ஒரு பா வகையின் யாப்பு விதிகள் மீறப்பட்டால், அதற்கு நெருங்கிய பாவினம் பொருத்தப்படும். 
   
 3. புற நடைகளை எவ்வாறு கையாளுவது ?

 4. சில இடங்களில் குறிப்பிட்ட பா வகையினை பொருத்துவதற்காக, சில விதிவிலக்குகள் உள்ளன. அவையே புறநடை. இதன்படி, பொதுவாக ஒற்றெழுத்தாக கருதப்படும் ஆய்தம், சில இடங்களில் குற்றெழுத்தாக கருதப்படும். அதே போல, உயிரளபெடை நெட்டெழுத்தாக கருதப்படும். சில இடங்களில் குற்றியலுகரம் அலகிடாது விடப்படும். 
   
  இவை அனைத்தும் தளை தட்டாமல் இருக்கவும், ஒரு குறிப்பிட்ட பா வகையினை பொருத்தவும் செய்யப்படும் அந்த சமயம் மட்டும்செயல்படுத்தப்படும் விதிவிலக்குகள். இவை யாவும் பொதுவாக விதிகள் கிடையாது. ஆகவே, இப்போதைக்கு அவை செயல்படுத்தப்படவில்லை. 
   
  ஆகவே, கீழ்க்கண்ட மாற்று வழிகளை கையாண்டு, பா வகை அலகிடுதலை மாற்றலாம். ஆய்தத்தை குற்றெழுத்தாக கையாள, ஃ’வை கு’வுடன் பிரதீயீடு செய்யலாம்.உயிரளபெடையில் உள்ள அளபெடுத்த உயிரெழுத்தை நீக்கலாம். அலகிடக்கூடாத எழுத்தை அடைப்புக்குறிக்குள் இடலாம்.
   
 5. நம் விருப்பப்படி அலகிடுவது எப்படி ?
 6.  
  சில நேரங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறையில் அலகிடுதல் சாத்தியம் ஆகும்.
   
  அந்நிலையில், குறிப்பிட்ட விதத்திலான அலகிடுதலை செயல்படுத்த, / குறியை இட்டு, அசை பிரித்த சொல்லாக உள்ளீடு கொடுக்கவும்.
   
  உதாரணமாக: கலை/யோ/டு என்றவாறு.
   
 7. ஐகாரகுறுக்கத்தின் மாத்திரை அளவ் என்ன?
 8.  
  சொற்களின் முதலின் 1.5 மாத்திரகள் இடையிலும் கடையிலும் 1 மாத்திரை அளவு.

ஏ.பி.ஐ

இம்மென்பொருளுக்கு ரெஸ்ட் ஏ.பி.ஐயும் உள்ளது. http://www.avalokitam.api/api என்ற வலைத்தள முகவரிக்கு கீழ்க்கண்ட பாரமீட்டர்களுடன் ஒரு போஸ்ட் ரிக்வெஸ்ட் செய்தால், ஓர் எக்ஸ்.எம்.எல் கோப்பு திருப்பி அனுப்பப்படும்.

verse : உரை தமிழ் யூனிகோடில்
lang : வெளியீட்டின் மொழி. 'en' அல்லது 'ta' வாக இருத்தல் வேண்டும். இயல்பிருப்பு 'ta'
kurilu : உயிர்முன் குற்றியலுகரத்தை அலகிடாது விடுதல். 1 அல்லது 0. இயல்பிருப்பு 0

டெர்மினல்

நீங்கள் இம்மென்பொருளை தங்கள் டெர்மினலில் இருந்தும் இயக்கலாம். மூல சோர்ஸ் கோட்'ஐ கிட்ஹப்பிலிருந்து டவுன்லோட் செய்யவும். பிறகு பி.ஹெச்.பி சி.எல்.ஐ மூலம் அதை செயல்படுத்தவும்.

ஓஎஸ் எக்ஸ்'ல் இயல்பிருப்பாக வரும் பி.ஹெச்.பியில் யூனிகோட் ஆதரவு முறையாக இல்லை. எனவே ஹோம்ப்ரூவின் மூலம் பி.ஹெச்.பி 5.4'ஐ இன்ஸ்டால் செய்யவும்.


பொதுவாக டெர்மினலில் யூனிகோட் தமிழ் முறையாக இருக்காது. எனவே, வெளியீட்டை கோப்பில் சேமிக்காத பட்சத்தில் ஆங்கில வெளியீட்டை பயன்படுத்தலாம்.


மிக்கவன் போதியின் மேதக்கு இருந்தவன் மெய்த்தவத்தால்
தொக்கவன் யார்க்கும் தொடர ஒண்ணாதவன் தூயன் எனத்
தக்கவன் பாதம் தலைமேல் புனைந்து தமிழுரைக்க !

Copyright © 2013 Vinodh Rajan. This software is released under GNU AGPL v3 license. You may read the license here