![]() |
அவலோகிதம் | யாப்பு மென்பொருள்பன்னூறாயிரம் விதத்திற் பொலியும் புகழ் அவலோகிதன் மெய்த் தமிழே ! |
அருள்வீற் றிருந்த திருநிழற் போதி
முழுதுணர் முனிவநிற் பரவுதும் தொழுதக
ஒருமனம் எய்தி இருவினைப் பிணிவிட்டு
முப்பகை கடந்து நால்வகைப் பொருளுணர்ந்
தோங்குநீர் உலகிடை யாவரும்
நீங்கா இன்பமொடு நீடுவாழ் கெனவே
நீரின் தண்மையும் தீயின் வெம்மையும்
சாரச் சார்ந்து
தீரத் தீரும்
சாரல் நாடன் கேண்மை
சாரச் சாரச் சார்ந்து
தீரத் தீரத் தீர்பொல் லாதே
புலவன் தீர்த்தன் புண்ணியன் புராணன்
உலக நோன்பி னுயர்ந்தோன் வென்கோ
குற்றங் கெடுத்தோய் செற்றஞ் செறுத்தோய்
முற்ற வுணர்ந்த முதல்வா வென்கோ
காமற் கடந்தோய் ஏம மாயோய்
தீநெறிக் கடும்பகை கடுந்தோ யென்கோ
ஆயிர வாரத் தாழியந் திருந்தடி
நாவா யிரமிலேன் ஏத்துவ தெவனோ
![]() |
|